இந்தியா

உக்ரைன் மீட்பு விமானத்தில் மோடியை புகழ்ந்து முழக்கமிட வற்புறுத்திய பாஜக.. முகம் சுளித்த இந்திய மாணவர்கள்!

உக்ரைனில் இருந்து மீட்டு வரப்படும் மாணவர்களிடம் மோடியைப் புகழ்ந்து முழக்கமிடும் படி வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

உக்ரைன் மீட்பு விமானத்தில் மோடியை புகழ்ந்து முழக்கமிட வற்புறுத்திய பாஜக.. முகம் சுளித்த இந்திய மாணவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த மீட்புப்பணிகளை வைத்துக் கொண்டு பா.ஜ.க கட்சியினர் அரசியல் செய்து கொண்டுவருகிறார்கள். மேலும் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு வேகமாக செயல்பட வேண்டும் என மாநில அரசுகள் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்டு நாடு திரும்பும் மாணவர்களிடம் பிரதமர் மோடியை புகழ்ந்து முழக்கமிட வலியுறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பாரத் மாதா கி ஜே,பிரதமர் மோடி ஜி வாழ்க என முழக்கமிடும்படி கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் என்ன செய்துவது என்று தெரியாமல் அவர்களும் முழக்கமிடுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியா நெட்டிசன்கள் பலரும் போரில் கூடவா இப்படி புகழ்தேடிவது என விமர்சித்துள்ளனர். மேலும் சிவசேன கட்சி எம்,பி பிரியங்கா சதுர்வேதி ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories