இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து.. தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி பலி.. விபத்துக்கு காரணம் என்ன?

ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து..  தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி பலி.. விபத்துக்கு காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்திற்குட்பட்ட துங்கதுர்த்தி கிராமத்தில் இன்று வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரெ கீழே விழுந்து நொறுங்கியது.

அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதை அடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடனே போலிஸாரும் மருத்துவ குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விபத்துக்குள்ளானது பயிற்சி ஹெலிகாப்டர் என்பதும், இந்த ஹெலிகாப்டர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மஹிமா என்ற பெண் பயிற்சி விமானி உயிரிழந்துள்ளார். அதேபோல் இவருடன் பயணம் செய்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும் உயர் அழுத்த மின் கம்பிகளில் ஹெலிகாப்டர் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்திற்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இரங்கல் தெரிவித்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories