இந்தியா

”இந்திய அரசிடம் சொந்தமாக விமானம்கூட இல்லையென கூறுவது எவ்வளவு அசிங்கம்”- மோடி அரசை சாடிய காங்கிரஸ் தலைவர்!

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

”இந்திய அரசிடம் சொந்தமாக விமானம்கூட இல்லையென கூறுவது எவ்வளவு அசிங்கம்”- மோடி அரசை சாடிய காங்கிரஸ் தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்துக்கு விற்றதால் பேரிடர் நேரத்தில் இந்திய அரசுக்கு என சொந்தமாக விமான நிறுவனம் கூட இல்லாத அவலம் மோடியின் பா.ஜ.க அரசால் ஏற்பட்டுள்ளது என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த விமர்சனங்கள் யாவும் மெய்யாகும் வகையில் ரஷ்யாவின் போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு மீட்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

போர் அறிவிக்கும் முன்பே உக்ரைனில் இருந்து நாடு திரும்பும்படி அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும், 25 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் 1 லட்சத்துக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதால் அனைவராலும் திரும்ப முடியாத சூழலே நிலவியது.

”இந்திய அரசிடம் சொந்தமாக விமானம்கூட இல்லையென கூறுவது எவ்வளவு அசிங்கம்”- மோடி அரசை சாடிய காங்கிரஸ் தலைவர்!

தற்போது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து எவரும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து ஏர் இந்தியாவிடம் காசு கொடுத்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியிருப்பது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. காலதாமதமான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த மெத்தன செயலை கண்டித்து பேசியுள்ளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “உலகத்தில் நடக்கும் நிகழும் நிகழ்வுகள் இந்திய மக்களாகிய நமக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யா- உக்ரைன் போரில் பல இந்தியர்கள் மாட்டிக்கொண்டு தவித்து வருக்கின்றனர். அவர்களை மீட்க விமானம் இல்லை என ஒன்றிய அரசு கூறுவது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories