இந்தியா

சாப்பிட வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியே அனுப்பிய உணவகம்.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஹரியானாவில் சாப்பிட வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிட வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியே அனுப்பிய உணவகம்.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹரியானா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று குர்கான். இங்கு உள்ள பிரபல உணவகத்திற்கு மாற்றுத்திறனாளி பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவக ஊழியர் ஒருவர் அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

இதற்கு காரணம் கேட்டதற்கு அந்த ஊழியர், "உங்கள் சக்கர நாற்காலி மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். எனவே உங்களுக்கு அனுமதியில்லை" என கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாற்றுத்திறனாளி பெண் ஸ்ரீஷ்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் அந்த பதிவில், "நேற்று இரவு எனது தோழி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ராஸ்டா உணவகத்திற்குச் சென்றோம். அப்போது எங்களுக்கு மேஜை கேட்டோம். ஆனால் ஊழியர்கள் இரண்டு முறை எங்களை புறக்கணித்தனர்.

மீண்டும் கேட்டபோது, சக்கர நாற்காலி உள்ளே செல்ல முடியாது. இது மற்ற ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்விட்டரைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட உணவகம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணின் ட்விட்டரை டேக் செய்து மன்னிப்பு கோரியுள்ளது.

அதில், "உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் ஊழியர்கள் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories