இந்தியா

பா.ஜ.க-வில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள்.. கோவா தேர்தலில் தொடரும் சறுக்கல் - பின்னணி என்ன ?

கோவா முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான லக்ஷ்மிகாந்த் பர்சேகர், மற்றும் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் ஆகியோர் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!

பா.ஜ.க-வில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள்.. கோவா தேர்தலில் தொடரும் சறுக்கல் - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 14 ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்த முள்ள 40 தொகுதிகளில், பா.ஜ.க 13 தொகுதிகளிலேயே வெற்றிபெற்றது. எனினும் குதிரை பேரம் மூலம் பிற கட்சிகளை வளைத்து, பா.ஜ.க தலைவர் மனோகர் பாரிக்கர் ஆட்சியைக் கைப்பற்றினார்.

துரதிர்ஷ்டவசமாக 2 ஆண்டுகளில்- கடந்த 2019-ஆம் ஆண்டு அவர் இறந்து போனார். பிரமோந்த் சாவந்த் புதிய முதல்வராக்கப்பட்டார். அவர் 2022 வரை பதவிக் காலத்தை நிறைவுசெய்தார். இதனிடையே, மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பா.ஜ.க-வில் வாய்ப்பு கேட்டிருந்தார். தனது தந்தையின் தொகுதியான பனாஜியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போதைய எம்.எல்.ஏ அடானாசியோ மான்ஸேரேட்டிற்கே, பனாஜி தொகுதியை ஒதுக்கிய பா.ஜ.க, உத்பல் பாரிக்கரை ஏமாற்றியது. இதையடுத்து, உத்பல் பாரிக்கர் பா.ஜ.கவிலிருந்து விலகியிருப்பதுடன், பனாஜி தொகுதியில் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

பா.ஜ.க-வில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள்.. கோவா தேர்தலில் தொடரும் சறுக்கல் - பின்னணி என்ன ?

அதேபோல், கோவா முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான லக்ஷ்மிகாந்த் பர்சேகருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தற்போதைக்கு நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

பர்சேகர் தற்போது கோவா தேர்தலுக்கான பா.ஜ.க-வின் அறிக்கைக் குழுவின் தலைவராக உள்ளார். அதுமட்டுமல்ல, கட்சியின் மையக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பா.ஜ.க-வில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் அடுத்ததடுத்து விலகுவது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories