இந்தியா

“பா.ஜ.கவை ஒழித்துக் கட்டுவோம்”: உ.பி தேர்தலில் அகிலேஷுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருக்கும் மம்தா பானர்ஜி!

உ.பி., தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

“பா.ஜ.கவை ஒழித்துக் கட்டுவோம்”: உ.பி தேர்தலில் அகிலேஷுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருக்கும் மம்தா பானர்ஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை எனவும், மம்தா பானர்ஜி, சமாஜ்வாதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டிஜிட்டல் வடிவிலான பிரசாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.கவில் இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மற்றும் 5 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சமாஜ்வாதி துணைத் தலைவர் கிரண் நந்தா, “மம்தா பானர்ஜி, காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள வாரணாசி வரவுள்ளார். அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories