இந்தியா

கணவன் கண்முன்னே நேர்ந்த கொடூரம்.. மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. ம.பி-யில் அதிர்ச்சி!

துப்பாக்கி முனையில் கணவன் முன்பே அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் கண்முன்னே நேர்ந்த கொடூரம்.. மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. ம.பி-யில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று காரில் சுற்றுலா தளங்களுக்குச் சென்றனர்.

பின்னர் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ரஹோஹர் என்ற பகுதியில் வந்ந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை இடைமறித்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் துப்பாக்கியைக் காட்டி காரில் இருந்து கீழே இறங்குமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் அந்தப் பெண் காரில் இருந்து கீழே இறங்கிய உடனே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரை இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அவரை தடுக்க முயன்ற கணவரை மற்றொருவர் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். பிறகு இருவரும் மாறி மாறி அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை வன்கொடுமை செய்த சோனு, சுமீர் சிங் பர்மீர் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories