இந்தியா

இந்தியாவில் சரசரவென உயரும் கொரோனா.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இந்தியாவில் சரசரவென உயரும் கொரோனா.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தினந்தோறும் வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல், கொரோனாவின் வேறு வகையான ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது.

இரண்டு தொற்றுகளும் ஒரே சமயத்தில் அதிகரித்து வருவதால் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1882 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்கும் விதமாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு, கோவா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories