இந்தியா

20 MLAக்கள்., 10 அமைச்சர்களுக்கு கொரோனா.. மீண்டும் மிரட்டும் கொரோனா தொற்று - அச்சத்தில் மக்கள் !

10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

20 MLAக்கள்., 10 அமைச்சர்களுக்கு கொரோனா.. மீண்டும் மிரட்டும் கொரோனா தொற்று - அச்சத்தில் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 1,431 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 454 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 23 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

மேலும் இந்தியாவில் டெல்டா வைரஸை போல் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் கூறுகையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரையொட்டி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 10 அமைச்சர்களுக்கும், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories