இந்தியா

ஒமைக்ரான் பரவல்.. 5 மாநில தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர்!

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவல்.. 5 மாநில தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களையும் தள்ளி வைக்க வேண்டும். பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கூறிய சுஷில் சந்திரா, "அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நடத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT-கள் பொருத்தப்படும்.

தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக சுமார் 1 லட்சம் வாக்குச்சாவடிகளில் நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் இருக்கும். தேர்தல் அட்டவணை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories