இந்தியா

"இந்திய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒமைக்ரான்" : ரிசர்வ் வங்கி கவலை!

இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் பெரும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

"இந்திய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒமைக்ரான்" : ரிசர்வ் வங்கி கவலை!
FRANCIS MASCARENHAS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் போடப்பட்ட முழுநேர ஊரடங்கு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர்.

இதையடுத்து கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து படிப்படியாகப் பொருளாதாரம் மீண்டுவந்தது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக டெல்லி, கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் வங்கியின் இருப்புநிலை மற்றும் முதலீடுகள் பலமாக இருப்பதாகக் கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர், அதே நேரம் செயல்படா சொத்துகளின் எண்ணிக்கை 6.9ல் இருந்து 9.5%ஆக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் பெரும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2வது நிதிநிலை தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories