உலகம்

பிரிட்டனில் ஒரேநாளில் 12,000 பேருக்கு ஒமைக்ரான்.. பீதியில் மக்கள் : ஊரடங்கிற்கு தயாராகும் உலக நாடுகள் !

பிரிட்டனில் ஒரேநாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஒரேநாளில் 12,000 பேருக்கு ஒமைக்ரான்.. பீதியில் மக்கள் : ஊரடங்கிற்கு தயாராகும் உலக நாடுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் 90 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் கூட அதிவேகமாக ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றால் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் ஒரேநாளில் 12 ஆயிரத்து 133 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது உலக மக்களைப் பீதியடையச் செய்துள்ளது. மேலும் இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால் உலக நாடுகள் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஒமைக்ரான் பாதிப்பு அடுத்த மூன்று நாட்களில் ஒன்றரை மடங்கு அதிகரித்து சமூகப் பரவலுக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக நெதர்லாந்து நாட்டில் ஜனவரி 14ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிர படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories