விளையாட்டு

ஒமைக்ரான் எதிரொலி: Ind vs SA பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!

குறைந்தபட்சமாக 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ஒமைக்ரான் எதிரொலி: Ind vs SA பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒமைக்ரான் பரவலால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடத்தப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

ஒமைக்ரான் எதிரொலி: Ind vs SA பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பாக்சிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தவிர குறைந்தபட்சமாக 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories