விளையாட்டு

”விராட் கோலியை பிடிக்கும்; ஆனால் அவர் சண்டை போடுறாரு” - BCCI தலைவர் கங்குலி பேட்டி!

வாழ்க்கையில் மன அழுத்தம் எதுவும் இல்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேட்டியளித்திருக்கிறார்.

”விராட் கோலியை பிடிக்கும்; ஆனால் அவர் சண்டை போடுறாரு” - BCCI தலைவர் கங்குலி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவி தொடர்பான விவாகரத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் பிசிசிஐ-ன் தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.

இதனை களையும் வகையில் கங்குலி விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கபில் தேவ், மதன் லால் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களை சந்திருந்தார்.

அப்போது, எந்த வீரரின் செயல்பாடும், அணுகுமுறையும் உங்களுக்கு பிடிக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி எனக் கூறி அவரது கள செயல்பாடு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுவார் என கருத்து கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசியுள்ள கங்குலி, மன அழுத்தத்தை சமாளிப்பது குறித்த கேள்விக்கு, வாழ்க்கையில் எந்த மன அழுத்தம் இல்லை. ஆனால் மனைவியும் காதலியும்தான் மன அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள் என கிண்டலாக பேசியிருக்கிறார்.!

banner

Related Stories

Related Stories