இந்தியா

பிரதமர் பேச்சுக்கு மதிப்பு இல்ல.. கேள்வி கேட்டுவிட்டு பதில் அளிக்கும் போது காணாமல் போன பா.ஜ.க MP-க்கள்!

மக்களைவில் கேள்வி கேட்டுவிட்டு அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது பா.ஜ.க எம்.பி.க்கள் அவையில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பேச்சுக்கு மதிப்பு இல்ல..
கேள்வி கேட்டுவிட்டு பதில் அளிக்கும் போது காணாமல் போன பா.ஜ.க MP-க்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29ம் தேதியிலிருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. அவை தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்க்கட்சித் தலைவர்கள் விவசாயிகள் மீது கார் ஏற்றிய லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரினர். ஆனால், ஒன்றிய அரசு விவாதிக்காமல் 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

அதேபோல் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, லடாக் பிரச்சனை, பெகாசஸ் உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பிரச்சகைளை குறித்து ஒன்றிய அரசு விவாதிக்காமல் கூட்டத்தொடரின் நாட்களை வீணடித்து வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்கப்பார்க்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க எம்.பி.க்கள் உட்பட தங்கள் தொகுதி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதில் முக்கியமான கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

பிரதமர் பேச்சுக்கு மதிப்பு இல்ல..
கேள்வி கேட்டுவிட்டு பதில் அளிக்கும் போது காணாமல் போன பா.ஜ.க MP-க்கள்!

அப்போது, கேள்வி கேட்ட பா.ஜ.க எம்.பிக்கள்சுகந்தா மஜும்தார், வினோத் குமார் சோன்கர், சங்கன்னா அமரப்பா, பா.ஜ.க இளைஞர் பிரிவுத் தலைவர் தேஜஸ்வி சூர்யா, சுனில்குமார் சிங், ரக்ஸா கட்ஸே, பிபி சவுத்ரி, சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் அவையில் இல்லாதது பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேத்திரமோடி, இந்த கூட்டத்தொடரில் பா.ஜ.க எம்.பி.க்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேள்வி கேட்டுவிட்டு பதில் அளிக்கும் போது பா.ஜ.க எம்.பிக்கள் அவையில் காணாமல் போனது பிரதமரின் பேச்சை அவமதிப்பது போன்று உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories