இந்தியா

“மலிவான எண்ணம்”... சாலைகளை கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சருக்கு நடிகை பதிலடி!

மகாராஷ்டிரா அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை ஹேமமாலினி, 'மலிவான ரசனை' என பதிலடி கொடுத்துள்ளார்.

“மலிவான எண்ணம்”... சாலைகளை கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சருக்கு நடிகை பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் தனது தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், "30 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்கள் எனது தொகுதிக்கு வந்து சாலைகளைப் பார்க்க வேண்டும். இவை நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல் இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன்" என பேசினார்.

அமைச்சர் குலாப்ராவ் பாட்டீலின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் மாநில பெண்கள் நல ஆணையத்தின் தலைவர் ருபாலி சகான்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஹேமமாலினி அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்குப் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்," பலரும் இப்படிப் பேசுகிறார்கள். இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவும் இப்படி பேசியிருக்கிறார். இப்படியான பேச்சுக்கள் மலிவான ரசனை கொண்டவை" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமைச்சர் குலாப்ராவ், யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம், ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குடா தனது தொகுதிகளில் உள்ள சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னங்களை ஒப்பிட்டுப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories