இந்தியா

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நவீனம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதீதி அளவிற்கு வளர்ந்துவிட்டது. ஆனாலும், இந்திய தேசத்தில் சாதி, மத ஆண்- பெண் ஏற்றதாழ்வுகள் போன்ற பிரச்சனைகள் முடிவுறாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஆண்கள் எளிதாக செய்யக்கூடிய மறுமணம், பெண்களுக்கு இன்னும் சிரமமாகவே உள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதுபோல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி ஒரு சம்பவம் சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது.

அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்குப் பெண் ஒருவர் வரன் தேடியதும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இளம் பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தியில், தனது தாயின் திருமண நிகழ்வுகள் குறித்துப் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

மேலும், திருமணம் தொடர்பான சில வீடியோக்கையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, தனது தாயின் புதிய வாழ்க்கை தொடங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து அந்த பெண்ணுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories