இந்தியா

அகிலேஷ் கட்சியில் சேர்ந்த BJP MLAக்கள்.. சிக்கலில் யோகி: சூடுபிடிக்கும் உ.பி. தேர்தல்!

சமாஜ்வாதி கட்சியில் இரண்டு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்துள்ளது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகிலேஷ் கட்சியில் சேர்ந்த BJP MLAக்கள்.. சிக்கலில் யோகி: சூடுபிடிக்கும் உ.பி. தேர்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, இப்போதே உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.

உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் கட்சி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவும் போராடி வருகிறது. மேலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மேலும் கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது.

அகிலேஷ் கட்சியில் சேர்ந்த BJP MLAக்கள்.. சிக்கலில் யோகி: சூடுபிடிக்கும் உ.பி. தேர்தல்!

இவர்களின் கூட்டணி உறுதியால் பா.ஜ.கவிற்கு அதிருப்தியிலிருந்துவந்த நிலையில் தற்போது இரண்டு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளது உத்தர பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில்லுபர் தொகுதியைச் சேர்ந்த வினய் சங்கர் திவாரி மற்றும் சந்த் கபீர் நகர் கலிலாபாத் தொகுதி திக்விஜய் நாராயணன் ஆகிய இரண்டு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஞாயிறன்று அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகள் பா.ஜ.க அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே மாற்றுக் கட்சியில் சேர்ந்திருப்பது முதல்வர் யோகிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories