இந்தியா

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை : சகவிளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி!

துப்பாக்கியால் சுட்டு, இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை : சகவிளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுர் சந்த். இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இவர் தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து கவுர் சந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 64வது தேசிய துப்பாக்கிச்சூடு போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

இதனால் சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தோல்வியால், கவுர் சந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories