விளையாட்டு

Shame on BCCI : 'கேப்டன்' கோலி நீக்கமும் கங்குலியின் விளக்கமும்.. ரசிகர்களின் எதிர்வினையும்!

போகிற போக்கில் ஒரு ட்வீட்டை மட்டும் போட்டு இந்திய அணியின் கேப்டனை மாற்றுவது நியாயமா? என ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

Shame on BCCI : 'கேப்டன்' கோலி நீக்கமும் கங்குலியின் விளக்கமும்.. ரசிகர்களின் எதிர்வினையும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனான கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை புதிய கேப்டனாக பிசிசிஐ அறிவித்திருந்தது. பிசிசிஐயின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. பிசிசிஐக்கு எதிராக கோலி ரசிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வந்தனர். இந்நிலையில் பிசிசிஐ செயலாளரான சவுரவ் கங்குலி கோலியின் நீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தையும் ரசிகர்கள் ஏற்கவில்லை. Shame on BCCI என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

கேப்டன்சி விஷயத்தில் கோலிக்கும் பிசிசிஐக்கு இடையே முரண்பாடுகள் இருப்பதாக சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்தே கோலி தாமாகவே டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது இந்த விஷயம் ரொம்பவே சுமூகமாகத்தான் அணுகப்பட்டது. கோலி தனது முடிவை டிவிட்டரில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். பிசிசிஐ சார்பிலும் உடனடியாக கோலிக்கு நன்றி தெரிவித்து வீடியோக்கள் வெளியிடப்பட்டது.

ஆனால், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது அவ்வளவு சுமூகமாக நடந்தது போல் இல்லை. அதாவது, கோலியே முன் வந்து தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை. பிசிசிஐ தான் டிவிட்டர் பக்கத்தில் இந்த முடிவை அறிவித்திருந்தது. அதுவும் கோலி பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இனிமேல் இந்திய ஒரு நாள் அணிக்கும் ரோஹித்தே கேப்டனாக செயல்படுவார் என அறிவித்திருந்தனர். இதுதான் ரசிகர்களை மேலும் கொந்தளிக்க செய்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குகிறோம் என்பதை முறையாக அறிவிக்கவில்லை. அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. போகிற போக்கில் ஒரு ட்வீட்டை மட்டும் போட்டு இந்திய அணியின் கேப்டனை மாற்றுவது நியாயமா? என ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்தான் கிட்டத்தட்ட 24 மணி நேரம் கழித்து பிசிசிஐ செயலாளர் கங்குலி இந்த சர்ச்சை குறித்து பேசியிருந்தார். 'கோலி டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொன்ன போது நாங்கள் அந்த முடிவை ஏற்கவில்லை. ஆனால், கோலி அந்த முடிவை எடுத்தார். இப்போது இந்திய அணியின் ஒயிட்பால் கிரிக்கெட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருக்கிறார்கள். இந்த முறை எப்போதும் சரிபட்டு வராது. அதனாலயே கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறோம்' என கங்குலி விளக்கமளித்திருந்தார்.

ஆனால், இந்த விளக்கத்தையெல்லாம் ஏற்க ரசிகர்கள் தயாராக இல்லை. கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு கோலிக்கு பிசிசிஐ 48 மணி நேரம் அவகாசம் கொடுத்ததாகவும் அதற்குள் கோலி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பதாலயே பிசிசிஐ தாமாக முன் வந்து கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. இதுவும் ரசிகர்களை கடுமையாக கோபமடைய செய்தது.

கங்குலி கொடுத்த விளக்கத்தையும் ரசிகர்கள் ஏற்பதாக இல்லை. ஏனெனில், இந்திய பெண்கள் அணியில் டி20 க்கு ஹர்மன்ப்ரீத்தும் ஒருநாள் போட்டிக்கு மிதாலி ராஜும் கேப்டனாக இருக்கிறார்கள். ஆண்கள் கிரிக்கெட்டில் ஒத்து வராத சிஸ்டத்தை பெண்கள் கிரிக்கெட்டில் மட்டும் ஏன் வைத்திருக்கிறீர்கள்? என லாஜிக்கான கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. அதைவிட, அந்த முடிவை பிசிசிஐ அறிவித்த விதமும் கோலிக்கு தாமதமாக நன்றி சொன்ன விதமும் ரசிகர்களை கடுமையாகவே கோபமடைய செய்திருக்கிறது. இதனால் டிவிட்டரில் Shame on BCCI என்ற டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories