வைரல்

“ஆசிரியர் தலையில் குப்பை பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டகாசம்” : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் !

கர்நாடகாவில் ஆசிரியர் தலையில் பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“ஆசிரியர் தலையில் குப்பை பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டகாசம்” : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகா மாநிலம் தாவண்கரே மாவட்டம், சென்னகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் அரசு உயிர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியர் தலையில் குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டூழியம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளியின் ஹிந்தி வகுப்பு ஆசிரியரான ஸ்ரீனிவாஸ் கவுடா பள்ளியில் வகுப்புகள் எடுக்கும் போது அதை கவனிக்காத மாணவர்கள் 4 பேர், ஆசிரியரை பாடம் எடுக்கவிடாமல், கேளி செய்துள்ளனர். தொடர்ந்து ஆசிரியரின் தலையில் குப்பைகள் போடும் பிளாஸ்டிக் பக்கெட்டை கவிழ்த்து அவரிடம் அத்துமீறி உள்ளனர். இந்த சம்பவத்தை வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போன்ற ஒழுங்கீனமான மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வளைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories