இந்தியா

60அடி ஆழ கிணற்றில் மூழ்கி இறந்த தாய்-மகன்; காப்பாற்ற சென்றவரும் பலி - தெலங்கானாவில் நடந்த கோர நிகழ்வு!

60 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் தாய் மகன் உட்பட காப்பாற்ற சென்ற நீச்சல் வீரரும் உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

60அடி ஆழ கிணற்றில் மூழ்கி இறந்த தாய்-மகன்; காப்பாற்ற சென்றவரும் பலி - தெலங்கானாவில் நடந்த கோர நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானாவின் துப்பாக்கா மண்டலத்தில் உள்ள சிட்டப்புர் கிராமத்தில்தான் இந்த சோக நிகழ்வு நடைபெற்றுள்ளது. சாலையோரமாக சென்றுக் கொண்டிருந்த கார் நிலை தடுமாறியதில் அருகே இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் கவிழ்ந்திருக்கிறது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலிஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது கிணற்றில் விழுந்த காரை மீட்கும் பணியில் போலிஸாரும் தீயணைப்புத்துறையினரும் இறங்கினர். நரசிம்மலு என்ற நீச்சல் வீரர் கிணற்றுக்குள் இறங்கி பார்வையிட்டார்.

60அடி ஆழ கிணற்றில் மூழ்கி இறந்த தாய்-மகன்; காப்பாற்ற சென்றவரும் பலி - தெலங்கானாவில் நடந்த கோர நிகழ்வு!

அவர் மேலெழும்பாததால் தண்ணீருக்குள் படமெடுக்கும் கேமிராவை செலுத்தி கண்காணித்ததில் 30 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த காரின் மேல் நீச்சல் வீரர் இறந்து கிடப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கிரேன் மூலம் கிணற்றில் மூழ்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீச்சல் வீரர் உட்பட காரில் இருந்த இருவர் என மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காரில் இருந்தது மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி(45), பிரசாந்த் (22) என்பதும், அவர்கள் சித்திப்பேட்டையில் உள்ள உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போதுதான் இந்த கோர நிகழ்வு நடைபெற்றது தெரியவந்தது.

மேலும் கிணற்றில் மூழ்கியவரை மீட்கச் சென்ற நீச்சல் வீரரும் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories