இந்தியா

கிரிப்டோ கரன்ஸியால் நடந்த விபரீதம்.. ரூ.70 லட்சத்தை இழந்த பேராசிரியர் தற்கொலை - தெலங்கானாவில் அதிர்ச்சி!

கிரிப்டோ கரன்ஸியில் ரூ.70 லட்சத்தை இழந்ததால் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

கிரிப்டோ கரன்ஸியால் நடந்த விபரீதம்.. ரூ.70 லட்சத்தை இழந்த பேராசிரியர் தற்கொலை - தெலங்கானாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்க சாமி. இவர் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் இவருக்கு முதலில் லாபம் கிடைத்துள்ளது. இதனால் பல பேரிடம் பணம் வாங்கி முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு தடை விதித்து நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்ய உள்ளது. இந்த தகவல் வெளிவந்ததை அடுத்து கிரிப்டோ கரன்ஸி வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது.

இதில் ராமலிங்க சாமிக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவருக்கு ரூ.70 ஆயிரம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்குப் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

மேலும், சிவபுரம் பஞ்சாயத்து தலைவர் லட்சுமன்ராவ் கொடுத்த பணத்திற்காக ராமலிங்க சுவாமியின் கார், தங்க நகைகள், காசோலைகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதுபோன்று பணம் கொடுத்த பலரும் பணம் கேட்டு ராமலிங்க சாமிக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலடைந்த ராமலிங்க சாமி கடந்த 22ம் தேதி சூர்யாபேட்டை பகுதியில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். இவர் அறைக்குச் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, ராமலிங்க சாமி குளியலறையில் இறந்த இருந்ததைப் பார்த்த விடுதி நிர்வாகம் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தது. பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கரிப்டோ கரன்ஸியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்து ராமலிங்கசாமி தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

banner

Related Stories

Related Stories