இந்தியா

“இந்தியாவுக்கு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்”: அமெரிக்கா எச்சரித்தது ஏன் தெரியுமா?- மோடி ஆட்சியில் அவலம்!

இந்தியாவுக்குப் பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா தங்கள் நாட்டுப் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

“இந்தியாவுக்கு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்”: அமெரிக்கா எச்சரித்தது ஏன் தெரியுமா?- மோடி ஆட்சியில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பைக் குறைத்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாத் தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன.

எனவே அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து பயணம் மேற்கொள்வதற்கான பயண எச்சரிக்கை குறியீட்டில், மிகவும் குறைவான 'லெவல் 2' இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories