இந்தியா

"குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள்": காரணம் சொன்ன மத்திய பிரதேச அரசு அதிகாரி!

குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள் என மத்திய பிரதேச அதிகாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள்": காரணம் சொன்ன மத்திய பிரதேச அரசு அதிகாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்புகளும் மதுபான கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காந்த்வா மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.பி.கிரார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'மதுபானம் வாங்க வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றைக் கட்டாயம் காட்ட வேண்டுமா?" என கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த அவர், "மதுபானம் குடிப்பவர்கள் பொய் பேசமாட்டார்கள். அவர்கள் சான்றிதழ் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை. தடுப்பூசி செலுத்திய உண்மையைச் சொன்னால் மட்டும் போதும்" என தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச அதிகாரியின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் "கருப்பாக இருப்பவன் பொய் பேசமாட்டான்" என்பது போல் உள்ளது இவரின் பேச்சு என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories