இந்தியா

வேலை நேரத்தில் மது குடித்த காவலாளி..தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்: பெங்களூருவில் அதிர்ச்சி!

மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் வீட்டின் உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை நேரத்தில் மது குடித்த காவலாளி..தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்: பெங்களூருவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் எச்.ஏ.எல் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த பசந்த் என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பசந்த் பணியின்போது மது குடித்துள்ளார். இதைப்பார்த்த குடியிருப்பின் உரிமையாளர் பாஸ்கர் ரெட்டி, "பணியில் இருக்கும்போது மது குடிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பு சங்கத்திடமும் காவலாளி பசந்த் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனால் காவலாளி பசந்த், பாஸ்கர் ரெட்டி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடியிருப்பில் பாஸ்கர் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென பசந்த், பாஸ்கர் ரெட்டியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக குடியிருப்புவாசிகள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், மருத்துவமனையில் பாஸ்கர் ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் காவலாளி பசந்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories