இந்தியா

முன் அனுபவம் இல்லாமல் சாகச முயற்சி.. இளைஞருக்கு நடந்த விபரீதம்.. பதறவைக்கும் வீடியோ காட்சி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் மீது தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன் அனுபவம் இல்லாமல் சாகச முயற்சி.. இளைஞருக்கு நடந்த விபரீதம்.. பதறவைக்கும் வீடியோ காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள யெலமஞ்சிலி நகரில் நகுல சவிதி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாகசக் கலைஞர்கள் கலந்துகொண்டு வாயில் மண்ணெண்னையை ஊற்றி தீ பற்றவைக்கும் சாகச நிகழ்ச்சியை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 30 வயசாகும் சந்தோஷும் அத்தகைய சாகசத்தை செய்வதாகக் கூறியுள்ளார். நண்பர்கள் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி வாயில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பற்ற வைத்துள்ளார்.

அப்போது தீ அவரது வாய் மற்றும் உடல்முழுவதும் பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் சந்தோஷ் மீது இருந்த தீயை அனைத்து, பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories