இந்தியா

சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற CRPF வீரர்... நால்வர் பலி.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?

சத்தீஸ்கரில் சக வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 CRPF வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற CRPF வீரர்... நால்வர் பலி.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்குட்பட்ட லிங்காலபள்ளி கிராமத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை (CRPF) 50 பட்டாலியன் முகாம் உள்ளது.

இந்த முகாமில் நேற்று அதிகாலை ரீத்தேஷ் ரஞ்சன் என்ற வீரர் திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சக வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயத்துடன் இருந்து மூன்று வீரர்களை மீட்டு விமானம் மூலம் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இறந்தவர்களில் ராஜிப் மொண்டல், தன்ஜி, ராஜ்மணி என மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரம் சம்பவம் அறிந்த உயரதிகாரிகள் அங்கு சென்று ரீத்தேஷ் ரஞ்சனை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories