இந்தியா

"மக்களின் வருமானம் அல்ல.. பா.ஜ.க தலைவர்களின் வருவாய்தான் அதிகரித்துள்ளது" : கபில் சிபல் தாக்கு!

மக்களைப் பற்றி பா.ஜ.க அரசுக்குக் கவலையில்லை என கபில் சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

"மக்களின் வருமானம் அல்ல.. பா.ஜ.க தலைவர்களின் வருவாய்தான் அதிகரித்துள்ளது" : கபில் சிபல் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்களுக்கு எதிரான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

குறிப்பாக பெட்ரோல், டீசல் , சிலிண்டர் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி, இஸ்லாமியர் மீதான தாக்குதல், இந்துத்துவா அரசியல் போன்ற பிரச்சனைகளால் மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வருவாய் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

ஆனால் அந்தக் காலகட்டத்திலும் அதானி, அம்பானி போன்றவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இவர்களின் வருவாய் மட்டும் எப்படி அதிகரித்தது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், பா.ஜ.க மற்றும் அதன் கட்சித் தலைவர்களின் வருமானம் மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் பொதுமக்களின் வருமானம் உயரவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள கபில் சிபல், "பா.ஜ.க தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை. இதனால்தான் ஏழைகள் வருமானம் உயர்ந்து உள்ளதாகக் கூறிவருகிறார்கள்.

ஒரு மாதத்தில் ரூ.6,000 ஊதியம் வாங்கியவர்கள் தற்போது ரூ.25,000 ஊதியம் வாங்குவதாகக் கூறி வருகிறார்கள். இது பெரிய ஜோக்காகத்தான் பார்க்க முடிகிறது.

பா.ஜ.க தலைவர்களின் வருமானம்தான் அதிகரித்துள்ளதே தவிர, மக்களின் வருமானம் உயரவில்லை. தற்போது பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

ஏழைகளைப் பற்றி பா.ஜ.கவுக்கு துளி கூட கவலையில்லை. இந்த அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நடைபெறவிருக்கும் உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலிலிருந்து இது துவங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories