இந்தியா

“கல்லூரிக்கு சாவர்க்கர் பெயர் வைப்பதா?” : மோடி அரசின் பெயர் மாற்றம் முடிவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிக்கு வீர சாவர்க்கர் பெயர் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“கல்லூரிக்கு சாவர்க்கர் பெயர் வைப்பதா?” : மோடி அரசின் பெயர் மாற்றம் முடிவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.கவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். 1911ஆம் ஆண்டு முதல் பல முறை ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார் சாவர்க்கர் .

“ஆங்கில அரசு விரும்பும் எதையும் செய்ய நான் தயார். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்குச் செல்வேன்” என சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு இப்படி பல முறை மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர்தான் சாவர்க்கர் என பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இருப்பினும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது சாவர்க்கரின் வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்த்து விட வேண்டும் என பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. மேலும் அவரை ஒரு விடுதலை போராட்ட வீரராகவும் மாற்ற முயற்சித்து வருகிறது.

அண்மையில் கூட ஒன்றிய அமைச்சர் ராஞ்நாத் சிங், மகாத்மா காந்தி கூறியதால்தான் சாவர்க்கர் ஆங்கில அரசுக்குக் கடிதம் எழுதினார் என கூறினார். இவரின் இந்த பேச்சுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு கல்லூரி ஒன்றிற்கு இந்துத்துவா அரசியல் முன்னோடி சாவர்க்கரின் பெயரை வைக்க ஒன்றிய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் மற்றொரு கல்லூரிக்கு டெல்லியின் முன்னாள் முதல்வர் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் கல்வியாளர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டவரின் பெயரையா கல்லூரிக்கு வைப்பது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories