இந்தியா

உருட்டுக் கட்டையால் போலிஸை தாக்கிய போதை ஆசாமி.. பதிலுக்கு காவலர் செய்தது என்ன? - சத்தீஸ்கரில் அதிர்ச்சி!

மதுபோதையில் போக்குவரத்து காவலரை இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உருட்டுக் கட்டையால் போலிஸை தாக்கிய போதை ஆசாமி.. பதிலுக்கு காவலர் செய்தது என்ன? - சத்தீஸ்கரில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம், சிட்டி கோட்வாலி பகுதியில் வெள்ளியன்று போக்குவரத்து காவலர் மஞ்சேஷ் சிங் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அனிஷ்கான் என்ற இளைஞர், கையில் தடியுடன் சாலையில் சுற்றிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த காவலர், இளைஞரை ஓரமாக நடந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அனிஷ்கான், காவலர் மஞ்சேஷ் சிங்கை தடியால் கொடூரமாக தாக்கியுள்ளார். போலிஸாரை தாக்கியதில் அந்த தடியே இரண்டாக உடைந்தது. அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததால் காவலர் அவரை எதிர்த்துத் தாக்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது போக்குவரத்து காவலர் மஞ்சேஷ் சிங் புகார் கொடுத்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலிஸார் இளைஞர் அனிஷ்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை தாக்கியபோதும், எதிர்த்துத் தாக்காமல் அமைதி காத்த காவலர் மஞ்சேஷ் சிங்கிற்கு காவல்துறை அதிகாரிகள் வெகுமதி அளித்துப் பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories