இந்தியா

2ஜி விவகாரத்தில் பொய்யான தகவல்... பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்!

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்.

2ஜி விவகாரத்தில் பொய்யான தகவல்... பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபமை தொடர்புபடுத்தி கூறிய கருத்துக்காக டெல்லி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வினோத் ராய் அளித்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அர்னாப் கோஸ்வாமி நடத்திய பேட்டியில் 2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்கக்கூடாது என்று தன்னை காங். எம்.பி சஞ்சய் நிருபம் நிர்பந்தித்ததாக வினோத் ராய் கூறியிருந்தார்.

2ஜி விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியதாக வினோத் ராய் மீது சஞ்சய் நிருபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொய்யான அறிக்கை அளித்ததற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் நிருபம் கோரியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வினோத் ராய், சஞ்சய் நிருபமுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

2014ஆம் ஆண்டு அர்னாப் கோஸ்வாமி எடுத்த பேட்டியில் தான் கூறியதில் உண்மையில்லை என்றும் தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் வினோத் ராய்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், “2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories