இந்தியா

"இந்தி அதிகாரப்பூர்வ மொழி.. இந்தியிலேயே பேசுங்க” : ஊழியர்களுக்கு ICAI அறிவுறுத்தல் - தி.மு.க MP கண்டனம்!

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI), இந்தி மொழி திணிப்பு முயற்சிக்கு தி.மு.க எம்.பி வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இந்தி அதிகாரப்பூர்வ மொழி.. இந்தியிலேயே பேசுங்க” : ஊழியர்களுக்கு ICAI அறிவுறுத்தல் - தி.மு.க MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI), இந்தி மொழி திணிப்பு முயற்சிக்கு தி.மு.க எம்.பி வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), இந்தி மொழியை அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்து, இந்தியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் உறுதியேற்குமாறு தமது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், “பல தரப்பட்ட மொழிகள் கொண்ட மக்கள் வாழும் நம் தேசத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கான முயற்சிகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் அவல நிலை நிலவுகிறது.

அதன் நீட்சியாக தற்போது, 2021 அக்டோபர் மாத பட்டயக் கணக்காளர் இதழில் (Chartered Accountant Journal), இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) தலைவர் சி.ஏ.நிஹார், இந்தி மொழியை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்துள்ளதோடு, பட்டயக் கணக்காளர்கள் (Charted Accountants) தங்களின் அன்றாட வேலைகளிலும், நிறுவனத்தின் அலுவல்களிலும், மாணவர்களுடனும், அரசுடனும், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடும்போதும் இந்தி மொழியை மட்டுமே பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய கவுன்சில் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 'ராஜ்ய பாஷை' என்பதால் இந்தியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் உறுதிமொழி எடுக்குமாறு ICAI மத்திய கவுன்சில் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ICAI, 1949ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தால் நாட்டில் பட்டயக் கணக்கியல் ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பு. இத்தகையதொரு அமைப்பில் அரங்கேற்றப்படும் இந்தி திணிப்பை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் கண்டித்து உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்.” என தி.மு.க எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories