சினிமா

"திரைவானின் சூரியன்" : தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"திரைவானின் சூரியன்" : தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தாதாசாகேப் பால்கே விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் பெறும் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:

“திரைத் துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!

நேசத்துடன் திரைக்கலையைப் போற்றி தரமான படங்கள் வழியே நம் நெஞ்சகங்களில் இடம்பிடித்து, இப்போது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ், ஆர்.பார்த்திபன், இமான் மற்றும் நாக விஷால் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories