இந்தியா

’Flipkart மட்டும்தான் ஆச்சர்யப்படுத்துமா? நாங்களும் செய்வோம்’: வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த AMAZON

அமேசான் நிறுவனம் ஐ போனுக்கு பதில் சோப்பு கட்டி அனுப்பியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

’Flipkart மட்டும்தான் ஆச்சர்யப்படுத்துமா? நாங்களும் செய்வோம்’: வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த AMAZON
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நூருல் அமீன். இவர் கடந்த 12ம் தேதி அமேசானில் ரூ 70,900க்கு Apple Iphone 12 ஆர்டர் செய்திருந்தார். பின்னர் இந்த ஆர்டர் அடுத்த மூன்று நாட்கள் கழித்து அக்டோபர் 15ம் தேதி டெலிவரியாகியுள்ளது.

இந்த பார்சலை டெலிவரி செய்த நபரின் முன்னிலையிலேயே நூருல் அமீன் பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது iphoneக்கு பதில் ஒரு துணி துவைக்கும் சோப்பு கட்டி மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து டெலிவரி செய்த நபரிடம் இது குறித்து கேட்டபோது தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் அமேசான் நிறுவனத்தின் இந்த செயல் குறித்து நூருல் அமீன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து அமேசான் நிறுவனம் நூருல் அமீனுக்கு 70,900 ரூபாயைத் திருப்பி அனுப்பியது. மேலும் நூருல் அமீனினுக்கு வந்த ஆப்பிள் ஐபோன் 12 கவரில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை போலிஸார் சோதனை செய்தபோது ஜார்கண்ட் மாநிலத்தில் பயன்பாட்டில் இருப்பதாகக் காட்டியுள்ளது.

இது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.ஃப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது வாடிக்கையாளர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories