இந்தியா

ஆர்டர் செய்ததோ இயர்போன்... வந்ததோ காலிடப்பா: ஃபிளிப்கார்ட் சேவையால் அதிர்ச்சியடைந்த நடிகர்!

ஃப்ளிப்கார்ட்டில் இயர்போன் ஆர்டர் செய்ததற்கு காலி டப்பா வந்ததைப் பார்த்து தொலைக்காட்சி நடிகர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆர்டர் செய்ததோ இயர்போன்... வந்ததோ காலிடப்பா: ஃபிளிப்கார்ட் சேவையால் அதிர்ச்சியடைந்த நடிகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாக்பூரைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் பராஸ் கல்நாவட் ஃப்ளிப்கார்ட்டில் ஒரு ஜோடி இயர்போன்களை ஆர்டர் செய்திருந்தார். இதையடுத்து ஊழியர் அவரது டெலிவரை ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர் அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது எதுவும் இல்லாததால் பராஸ் கல்நாவட் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டரில், ஃப்ளிப்கார்ட் பெட்டியிலிருந்து நான் எதுவும் பெறவில்லை. காலப்போக்கில் ஃப்ளிப்கார்ட் உண்மையில் மோசமாகி வருகிறது. விரைவில் மக்கள் இதிலிருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தப் போகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இவரது ட்விட்டருக்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், ஆர்டரைப் பற்றிய உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த பிழைக்கு மன்னிக்கவும். நாங்கள் உங்களுக்கு உதவ இங்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளது.

அண்மையில்தான் மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஐபோன் 12 மாடலை ஆர்டர் செய்திருந்தார். இதற்குப் பதில் அவருக்குச் சோப்பு கட்டிகள் வந்துள்ளது. தற்போது இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பா வந்துள்ளது. தொடர்ச்சியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சேவை மோசமடைந்துள்ளது வாடிக்கையாளர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories