இந்தியா

நள்ளிரவில் தாறுமாறாக ஓடி குடிசை வீட்டிற்குள் புகுந்த லாரி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!

மத்திய பிரதேசத்தில் சாலையோரம் இருந்த குடிசை வீட்டிற்குள் லாரி புகுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

நள்ளிரவில் தாறுமாறாக ஓடி குடிசை வீட்டிற்குள் புகுந்த லாரி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், டோமோக் மாவட்டத்திற்குட்பட்ட பத்யாஹர் - ஹட்டா சாலையில் நேற்று இரவு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி அஜனி தபரியா என்ற கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த குடிசை வீட்டிற்குள் லாரி புகுந்தது. இதில் குடிசை வீடு சரிந்து விழுந்தது. மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆகாஷ் மகிர்வார், சகோதரி மனீஷா, சகோதரன் ஓம்கர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

அதேபால் லாரியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தார். மேலும் குடிசை வீட்டில் உயிரிழந்த மூன்று பேரின் பெற்றோர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர்கள் இந்த விபத்திலிருந்து தப்பியுள்ளனர். இந்த விபத்தைக் கேட்டுப் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து போலிஸார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

banner

Related Stories

Related Stories