இந்தியா

பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர்: லாட்ஜிற்கு வரவழைத்து அடித்து உதைத்த பெண்கள்!

ரயில்வே நிலையத்தில் பணியாற்றிவரும் பெண்ணை லாட்ஜுக்கு வரச்சொல்லிய ரயில்வே ஊழியரை பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் திருப்பதி அரங்கேறியுள்ளது.

பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர்: லாட்ஜிற்கு வரவழைத்து அடித்து உதைத்த பெண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு வேலை செய்யும் பெண்ணை லாட்ஜுக்கு வரச்சொல்லி மாதர் சங்கத்திரனாரிடம் சிக்கி சின்னாபின்னமான இந்த நபர் பெயர் துரை.

திருப்பதி ரயில்வே நிலையத்தில் பணியாற்றிவரும் இவர் அங்கு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் பணிபுரிந்து வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். மேலும் தன்னோடு ரகசியமாக பேச திருப்பதியில் உள்ள GKSR Residancy என்ற லாட்ஜிற்கு வருமாறும் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் துணிந்து அவரை கையும் களவுமாக பிடித்துக்கொடுக்க முடிவுசெய்தனர்.

இது தொடர்பாக மாதர் சங்கத்தில் புகார் கொடுக்க, அவர்கள் உங்களில் ஒருவர் ரூமுக்கு வருவதாக கூறுங்கள் அங்கே மறைந்திருந்து அவரை நாங்கள் பிடித்துவிடுகிறோம் என திட்டமிட்டு அதேபோல அப்பெண் ஊழியர் அந்த லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கே சென்ட் அடித்துக்கொண்டு மணமகன் போல துரை அமர்ந்திருக்க அங்கே அப்பெண் சென்றதும் கதவை அடைத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர்: லாட்ஜிற்கு வரவழைத்து அடித்து உதைத்த பெண்கள்!

உடனே கதவைத்தட்டி உள்ளே நுழைந்த மாதர் சங்கத்தினர் “ஏன்யா பெண்கள்னா உனக்கு கேவலமா நினைச்சுட்டியா” எனக்கேட்டு கையாளும் செருப்பாலும் அடித்து சிறப்பாக கவினித்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க உடனே அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு அய்யயோ எனது வேலை பொய் மானம் மரியாதையை போய் விடும், இனி இப்படி தவறாக நடந்துகொள்ளமாட்டேன் என கையெடுத்து கும்பிட்டு கதறியுள்ளார் துரை.

தன்மானத்தை பற்றி நீ பெண்களை லாட்ஜுக்கு கூப்பிடும்போது யோசித்திருக்கவேண்டும் என கூறி அவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் துரையை அழைத்து சென்று அப்பெண்ணிடம் முறைப்படி புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிபுரியுமிடத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டால் என்ன விபரீதம் ஏற்படுமென்பதற்கு பெண்கள் கொடுத்த தர்ம அடி ஒரு தக்க பாடமாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories