இந்தியா

“விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்.. இது சர்வாதிகார ஆட்சி”: பாஜக அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!

லக்னோவுக்குச் சென்ற பிரதமர் மோடி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை ஏன் சந்திக்க வில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்.. இது சர்வாதிகார ஆட்சி”: பாஜக அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதையடுத்து இறந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்பதற்காகச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச போலிஸார் தடுத்து நிறுத்திக் காவலில் வைத்துள்ளனர். மேலும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட பலரையும் விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க விடாமல் உத்தர பிரதேச போலிஸ் தடுத்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல உள்ளார். இதற்கு முன்பாக இவர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளின் உரிமைகள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

லக்னோவுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் கெரி பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்காதது ஏன்?. இது விவசாயிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல். விவசாயிகள் ஜீப் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர்.

“விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்.. இது சர்வாதிகார ஆட்சி”: பாஜக அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!

லக்கிம்பூர் கெரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் ஒருவரும், அவரின் மகனும் வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு. ஆனால், நாங்கள் கேள்வி எழுப்பினால், இந்த விவகாரத்தைப் பேசினால், நாங்கள் அரசியல் செய்கிறோம் என ஊடகங்கள் பேசுகின்றன.

நாங்கள் ஜனநாயக முறையைப் பராமரிக்க முயல்கிறோம். இந்த தேசத்துக்கு நம்பிக்கையூட்டப் போகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தார், விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories