இந்தியா

"பெண்ணை எப்படி விடிவதற்குள் கைது செய்யலாம்?” : பிரியங்கா காந்தி கைதுக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

உத்தர பிரதேச போலிஸார் சட்டவிரோதமாகச் செயல்படுவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

"பெண்ணை எப்படி விடிவதற்குள் கைது செய்யலாம்?” : பிரியங்கா காந்தி கைதுக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றியதில் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இறந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூருக்கு சென்றிருந்தார்.

அப்போது உத்தர பிரதேச போலிஸார் கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். மேலும் 30 மணி நேரத்திற்குப் பிறகு அவர் மீது உத்தர பிரேத போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் பிரியங்கா காந்தியை போன்றே சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட பலரையும் விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க விடாமல் தடுத்துத் தடுப்பு காவலில் வைத்துள்ளது.

இந்நிலையில், உ.பி.யில் உள்ள போலிஸார் சட்டத்துக்குப் பணிந்து நடக்காமல், ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குக்குக் கட்டுப்படுகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீதாபூரில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சூழல், உத்தர பிரதேசத்தில் முழுமையாகச் சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதையே காட்டுகிறது. பிரியங்கா காந்தி கடந்த 4-ஆம் தேதி காலை 4.30 மணிக்குக் கைது செய்யப்பட்டுள்ளார்.

"பெண்ணை எப்படி விடிவதற்குள் கைது செய்யலாம்?” : பிரியங்கா காந்தி கைதுக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

சீதாபூர் பிஏசி விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிபதி இருவரும் சீதாபூரில் இருக்கிறார்கள். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பிரியங்கா காந்தி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்தப் பெண்ணையும் சூரிய உதயத்துக்கு முன்போ அல்லது சூரிய மறைவுக்குப் பின்போ கைது செய்யக்கூடாது. ஆனால், பிரியங்கா காந்தி அதிகாலை 4.30 மணிக்குக் கைது செய்யப்பட்டார். அவரை ஆண் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ததும் சட்டவிரோதம்.

உத்தர பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஆதித்யநாத்தின் ஒழுங்காகும். உ.பி.யில் உள்ள போலிஸார் சட்டத்துக்குப் பணிந்து நடக்காமல், ஆதித்யநாத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குக்குக் கட்டுப்படுகிறார்கள்'' என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories