இந்தியா

ஏமாற்றிய காதலி; இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்; ஓடும் பேருந்தில் கொடூரம் - கர்நாடகாவில் பகீர்!

ஓடும் அரசு பேருந்தில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஏமாற்றிய காதலி; இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்; ஓடும் பேருந்தில் கொடூரம் - கர்நாடகாவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சிகோடி தாலுகா பகுதியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிகோடி தாலுக்கா சங்கேஷ்வரா நகரிலிருந்து படா கிராமத்திற்கு அரசு பேருந்து ஆலூர் கே.எம். கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் காம்ப்ளே (28), ஹுக்கேரி தாலுக்கா படா கிராமத்தைச் சேர்ந்த வந்தனாஹட்டிகாரா (30) மற்றும் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பிரவீன் காம்ப்ளே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஓடும் பேருந்தில் உள்ள வந்தனா என்ற இளம்பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அந்த பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டார். பின்னர் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.

வந்தனாவை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்று விட்டு பிரவீன் காம்ப்ளே என்னருகே யாரும் வர வேண்டாம் என எச்சரித்தார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சங்ககேஷ்வரா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலிஸார் பிரவீன் காம்பிளேவை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் வந்தனா ஹட்டிகரா அவருடைய அத்தை பெண் என்றும் இவர்கள் இருவரும் காதலித்து உல்லாசமாக இருந்து வந்தார்கள் எனவும் இந்நிலையில் வந்தனா பிரவீன் காம்ப்ளேவிடம் இருந்து விலகிவிட்டு வேறு ஒரு நபரிடம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். அதனால் கோபத்தில் இருந்த நான் வேறு ஒரு நபரிடம் இருக்கும் தொடர்பை விட்டுவிடு என பலமுறை கூறினேன்.

ஆனால் வந்தானா கேட்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் அவள் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தேன் என போலிஸாரிடம் தெரிவித்தார். சங்ககேஷ்வரா போலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories