இந்தியா

சவால் விட்ட பா.ஜ.க படுதோல்வி.. 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி!

பவானிப்பூர் இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

சவால் விட்ட பா.ஜ.க படுதோல்வி.. 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருப்பினும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதனா,ல் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இதனால் பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் பிரியங்கா டிப்ரிவால் களம் இறங்கினார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது.

இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கி எண்ணப்பட்டது. இதில் பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை விட 52,832 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், "பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கும், நான் வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி, நந்திகிராமில் நான் தோற்றது ஒரு சதி. பவானிப்பூர் மட்டுமின்றி சம்சர்கன்ஞ் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும்" என தெரிவித்தார்.

இந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா 26,320 வாக்குகளும் பெற்றுள்ளனர். மற்ற இரண்டு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பவானிபூர் இடைத்தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் மம்தா பானர்ஜி அவர்களே. மேற்கு வங்க மக்கள் தங்கள் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு மீண்டும் சான்றளிக்கும் வகையில் இந்தப் பெருவெற்றி திகழ்கிறது.”எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories