தமிழ்நாடு

“மக்களுக்காக தினமும் 19 மணிநேரம் உழைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : குலாம் நபி ஆசாத் புகழராம் !

நாட்டின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

“மக்களுக்காக தினமும் 19 மணிநேரம் உழைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : குலாம் நபி ஆசாத் புகழராம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நமி ஆசாத், “இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சரா மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரது செயல்பாடுகள் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தினந்தோறும் 18 முதல் 19 தணி நேரம் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார்.

தந்தை கலைஞரை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மக்களுக்காக உழைத்து வருகிறார். மேலும் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிச் சிறந்த முதலமைச்சராகச் செயல்படுகிறார்” என தெரிவித்தார்.

முதலமைச்சருடனான இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories