இந்தியா

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: டெல்லி ஐகோர்ட்டில் நடந்தது என்ன?

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் போலிஸார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: டெல்லி ஐகோர்ட்டில்
 நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டிங்குராம் என்ற ஆயுதப்படையைச் சேர்ந்த போலிஸ்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திடீரென அவர் வைத்தியருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வழக்கறிஞர்கள் மற்றும் சக போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு போலிஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: டெல்லி ஐகோர்ட்டில்
 நடந்தது என்ன?

முதற்கட்ட விசாரணையில் டிங்குராம் விடுப்பில் சென்று இன்று தான் பணிக்குத் திருப்பியுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி நீதிமன்றங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories