இந்தியா

பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை; அடிவாங்கும்போது மனைவி வரவில்லை என கொலை செய்த கணவன்: மும்பையில் பயங்கரம்!

மும்பையில் மனைவியைக் கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை; அடிவாங்கும்போது மனைவி வரவில்லை என கொலை செய்த கணவன்: மும்பையில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை விராரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி சுஷ்மிதா. ஜெகதீஷ் ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வேலை முடிந்து வீட்டிற்கு ஜெகதீஷ் வந்துள்ளார்.

அப்போது அவரின் பக்கத்து வீட்டில் இருப்பவர் ஜெகதீஷ் வீட்டின் அருகே துணியை உலர வைத்துள்ளார். இதையடுத்து எங்கள் வீட்டின் அருகில் ஏன் துணியைக் உலர வைத்திருக்கிறாய் என கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகதீஷை பக்கத்து வீட்டுக்கார் அடித்துள்ளார். அப்போது மனைவியை உதவிக்கு அழைத்துள்ளார். அந்தநேரம் அவர் தனது அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் அங்குச் சென்று மனைவியின் தலையைப் பிடித்து சுவரில் மோதியுள்ளார்.

மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவியைப் பல முறை குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் உடனே மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இங்கு சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெகதீஷைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories