இந்தியா

நாளை ராஜஸ்தானில் இணைய சேவை முடக்கம் : காரணம் என்ன?

ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் நாளை இண்டர்நெட் சேவையை முடக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாளை ராஜஸ்தானில் இணைய சேவை முடக்கம் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாளை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4,153 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வில் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மட்டும் 2.52 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்காக நாளை இலவச பயண வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் நாளை இண்டர்நெட் சேவையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அஜ்மீர் மாவட்டத்தில் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொபைல் இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

மேலும் லேண்ட்லைன் போன் சேவைகள் மட்டுமே செயல்படும். தேர்வின்போது முறைகேடுகளை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றபோது செல்போன்களைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. ஜெய்ப்பூரில் தேர்வறையிலிருந்து வாட்ஸ்-அப் மூலம் வினாத்தாள் லீக் ஆனது. இந்நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories