இந்தியா

119 ஆபாச வீடியோ.. வளர்ந்துவரும் நடிகைகளை வைத்து வீடியோ எடுத்த ஷில்பா ஷெட்டியின் கணவர் : அதிர்ச்சி தகவல்!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தராவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

119 ஆபாச வீடியோ.. வளர்ந்துவரும் நடிகைகளை வைத்து வீடியோ எடுத்த ஷில்பா ஷெட்டியின் கணவர் : அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் வளர்ந்துவரும் இளம் நடிகைகளிடம் ஆசை வார்த்தை கூறியும் பணத்தாசை காட்டியும் அவர்களை அழைத்து வந்து, ஆபாச வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த ஆபாச வீடியோக்களை வெளியிடுவதற்காக மொபைல் ஆப் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஜூலை 19ம் தேதி ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு துணையாக இருந்த ரேயான் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் கைது தொடர்பாக 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் ஜாமின் கோரிய வழக்கில், 50 ஆயிரம் ரொக்கம் அளிக்கும் ஜாமினில் விடுதலை செய்தது விசாரணை நீதிமன்றம்.

இதனிடையே ராஜ் குந்த்ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க் போன்றவற்றில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ் குந்த்ரா, இளம் நடிகைகளை ஆபாச வீடியோவில் நடிக்க வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்றும் போலிஸார் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories