தமிழ்நாடு

மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் எடுத்த சபதம்... அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாள் இன்று!

காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று!

மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் எடுத்த சபதம்... அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாள் இன்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாத்மா காந்தி என்றதும் நினைவிற்கு வருவது எளிமையான உடையில் வரும் அவரது உருவம்தான். காந்தி தனது கடைசி காலம் வரை இத்தகைய எளிமையான ஆடையை அணிந்தார் என்பதே வரலாறு. அத்தகைய வரலாறுக்கும் தமிழ்நாட்டுக்கு பெரும் தொடர்பு உண்டு என்பதே நமக்கு கிடைத்த பெருமையாகும்.

காந்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பல முக்கிய சம்பவங்களில் தமிழ்நாடு பங்கு வகிக்கிறது. குறிப்பாக, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மிகவும் நேசித்து வந்தார் மகாத்மா காந்தி. அதனால்தான் பல மேடைகளில் தான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று வருந்திப் பேசியுள்ளார். மேலும் தமிழ் மொழியைக் கற்றுத்தர தனக்கு ஒரு ஆசிரியரையும் நியமித்து இருந்தார்.

மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் எடுத்த சபதம்... அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாள் இன்று!

சரி இந்த கதைக்கு வருவோம்..

வெளிநாட்டில் சட்டப்படிப்பு மேற்கொண்ட மகாத்மா காந்தி 1888ஆம் முதல் கோட்-சூட் அணிவதையே தனது வழக்கமாக வைத்திருந்தார். அதன்பிறகு 33 ஆண்டுகளுக்குப் பிறகு 1921ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த அவர் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு எனத் தனது ஆடைப் பழக்கத்தை மேற்கொண்டார்.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி ஒரே நாளில் தன்னை மாற்றிக்கொள்ள பல காரணம் இருந்தாலும், இன்றோடு இந்த நடைமுறையைக் கைவிடவேண்டும் என எண்ண வைத்தது தமிழ்நாடுதான்.

1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது சோழவந்தான் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை ஜன்னல் வழியாகப் பார்த்தார் காந்தி. நாட்டின் சாதாரண மக்கள் முழு உடை அணிய வசதியில்லாதபோது, தான் மட்டும் எப்படி முழு உடை அணியலாம் என்ற கேள்வி காந்திக்கு எழுந்தது.

மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் எடுத்த சபதம்... அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாள் இன்று!

அதன் காரணமாக இனி சாதாரண மக்களைப் போலவே உடை அணிவது என்ற முடிவை காந்தி எடுத்தார். மதுரையில் தங்கியிருந்த காலத்திலேயே இந்த முடிவை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அப்படி மாறிய அவருடைய உடை அணியும் வழக்கம் அவருடைய வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்தது. இது மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட பெரிய பாடம்.

இப்படியாக, மகாத்மா காந்தி தமிழகத்தில் இருந்து கற்றதும், பெற்றதும் ஏராளம். தேசத்தந்தை மகாத்மா காந்தி தனது அரையாடைப் புரட்சியைத் தொடங்கிய நாள் இன்று!

banner

Related Stories

Related Stories