இந்தியா

“வேலைவாய்ப்பின்மையின் தந்தை” : மோடியின் பிறந்தநாளை வேலையில்லாத் திண்டாட்ட நாளாக அனுசரித்த காங்கிரஸ்!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையில்லாத் திண்டாட்ட நாளாக காங்கிரஸ் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்.

“வேலைவாய்ப்பின்மையின் தந்தை” : மோடியின் பிறந்தநாளை வேலையில்லாத் திண்டாட்ட நாளாக அனுசரித்த காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையில்லாத் திண்டாட்ட நாளாக இளைஞர் காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.

இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் எனக் கூறி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் பழங்கள், பூக்கள், பக்கோடாவை விற்பனை செய்து தங்களின் எதிர்ப்புகளை இளைஞர்கள் தெரிவித்தனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மோடியின் பிறந்தநாளை வேலைவாய்ப்பின்மை நாளாக அனுசரிக்கும் விதத்தில் 100 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட பேனரைத் தயாரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

“வேலைவாய்ப்பின்மையின் தந்தை” : மோடியின் பிறந்தநாளை வேலையில்லாத் திண்டாட்ட நாளாக அனுசரித்த காங்கிரஸ்!

இப்படி நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை தினமாக அனுசரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர் காங்கிரஸின் இந்தப் போராட்டத்தால் பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இப்படி நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை தினமாக அனுசரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர் காங்கிரஸின் இந்தப் போராட்டத்தால் பா.ஜ.க தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories