அரசியல்

”பின்னடைவை சந்திப்பதாலேயே முதல்வர், ஆளுநர், தலைவர்களை மாற்றுகிறது” - பாஜகவை கடுமையாக சாடிய முத்தரசன்!

லஞ்ச ஒழிப்பு புகாரில் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளை தடுக்க முயற்சிக்கும் நோக்கில் போராட்டங்களில் ஈடுபடுவதே குற்றம் என அதிமுகவினரை சாடியுள்ளார் முத்தரசன்.

”பின்னடைவை சந்திப்பதாலேயே முதல்வர், ஆளுநர், தலைவர்களை மாற்றுகிறது” - பாஜகவை கடுமையாக சாடிய முத்தரசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் துணை நிலை ஆளுநர்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க அரசை முத்தரசன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

திருச்சி மணப்பாறையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மாணவ, மாணவிகள் தற்கொலை எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். நீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைய வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்கிட வேண்டும். ஒப்புதல் வழங்காமல் மாணவ, மாணவிகளை வஞ்சித்தால் போராட்டம் தீவிரமடையும்.

”பின்னடைவை சந்திப்பதாலேயே முதல்வர், ஆளுநர், தலைவர்களை மாற்றுகிறது” - பாஜகவை கடுமையாக சாடிய முத்தரசன்!

மறைமுகமாக மனுதர்ம கொள்கையை புகுத்துவதற்கு உள்நோக்கம் உள்ளது நீட் தேர்வு. படிப்பது பாவம், படிப்பதை கேட்பதும் பாவம் என்ற மனுதர்மம் ஆரம்ப காலங்களில் இருந்தது. அதையெல்லாம் எதிர்த்து போராடிதான் இன்று பலரும் மருத்துவர், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பின்தங்கிய மக்கள் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். ஆனால் அது இல்லாமல் ஆக்குவதற்கான சதிதான் இது. நீட் தேர்விற்கு பிடிவாதம் பிடிக்கின்ற பாஜகதான் காரணம் என்றார்.

பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. அதை சரிகட்டுவதற்காகத்தான் ஒன்றிய அமைச்சர்களை மாற்றுவது, மாநில முதல்வர்களை மாற்றுவது, தோற்றவர்களுக்கு கவர்னர் பதவி அளிப்பது, புதிய கவனர்களை நியமிப்பது, புது தலைவர்களை கொண்டு வருகின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் இன்று துணை நிலை ஆளுநர்கள், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் இப்படி தான் அந்த கட்சி உள்ளது.

உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் பெரும்பாலானோர் போலிஸால் தேடப்படும் நபர்கள், கிரிமினல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடக்கூடியவர்கள். லஞ்ச ஒழிப்பு புகாரில் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளை தடுக்க முயற்சிக்கும் நோக்கில் போராட்டங்களில் ஈடுபடுவதே குற்றம். பிரச்சனையை திசை திருப்புதற்கான முயற்சி தான் இந்த போராட்டம் எல்லாம். ஆனால் திசை திருப்ப முடியாது. கொடநாடு விவகாரத்தில் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு, யாராக இருந்தாலும் குற்றம் செய்யாடிவில் ஏன் பயப்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories